ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவராவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் - ரவி சாஸ்திரி.! - Seithipunal
Seithipunal


பிசிசிஐ அடுத்த தலைவராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி தேர்வு செய்யப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக முன்னாள் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு பிசிசிஐ தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும், செயலாளராக ஜெய்ஷாவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் அக்டோபர் மாதத்துடன் பிசிசிஐ தலைவர் மற்றும் செயலாளர் பதவி காலம் முடிவடைய உள்ளது.

இந்த நிலையில் மும்பையில் பிசிசிஐயின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கங்குலி பிசிசிஐ தலைவர் பதவியில் தொடர விரும்பினார். ஆனால் மற்ற நிர்வாகிகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கங்குலிக்கு ஐபிஎல் கமிட்டியின் தலைவர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், கங்குலி அதனை பெற்று கொள்ள விரும்பவில்லை.

இந்த நிலையில் அக்டோபர் மாதம் பிசிசிஐ தலைவர், செயலாளர், துணைத் தலைவர், இணை செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து பிசிசி தலைவர் பதவிக்கு கர்நாடகத்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இது குறித்து பேசிய இந்திய அறிவியல் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 'ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவராவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் அவர் உலகக் கோப்பையில் எனது சக விளையாட்டு வீரராக இருந்தார். அவர் கர்நாடகா கிரிக்கெட் சங்க தலைவராக சிறப்பாக பணியாற்றி தற்போது பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்க உள்ளார். அவர் பிசிசிஐ தலைவராவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ravi Shastri speech about Roger Binny elected BCCI president


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->