சிஎஸ்கே-வில் நம்பர் ஒன் வீரர் இணைகிறார்? வெளியான பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ராஜஸ்தானுக்கு ஆடிவரும் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறுவார் என்ற தகவல் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

தற்போதைய ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானிக்கு ஆடிவரும் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் இந்தியா சிமெண்ட்ஸில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இதன் மூலம் அவர் சென்னை அணிக்கு திரும்புவதற்கு உண்டான வழி ஏற்பட்டுள்ளது என்கிறது கிரிக்கெட் வட்டாரம்.

ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உயர் செயல் திறன் மையத்திற்கு பொறுப்பேற்க இருப்பதாகவும், அடுத்த ஐபிஎல் சீசனுக்குள் இந்த மையம் முழுமையாக செயல்பட தொடங்க உள்ளதாகும் தகவல்கள் வெளியாகி உள்ளன

இதன் காரணமாக இந்த ஆண்டு நடக்கும் ஏலத்தில் அஸ்வின் மீண்டும் சிஎஸ்கே அணியுடன் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

ஒருவேளை இந்த ஏலத்தின் ரவிச்சந்திரன் அஸ்வினை சிஎஸ்கே அணியால் வாங்க முடியவில்லை என்றால், இந்த ஏலத்திற்கு பிறகு அவரை வாங்கும் நடவடிக்கையில் சிஎஸ்கே அணியின் நிர்வாகம் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு தெரிவிக்கையில், ரவிச்சந்திரன் அஸ்வின் விவகாரத்தை பொருத்தவரை ஏலத்தின் போக்கை பொருத்தது தான். அதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.

அவரை அணியில் சேர்த்துக் கொள்வதற்கு உண்டான வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் நாம் பார்க்க வேண்டும்.

தற்போது சிஎஸ்கே அணியின் உயர் செயல் திறன் மையத்தில் பொறுப்பேற்க உள்ளார். இந்த மையத்தில் சிஎஸ்கே அணியின் கிரிக்கெட்டுக்கு உண்டான நடவடிக்கைகளை அவர் கவனித்துக் கொள்வார்.

அவருடன் ஒப்பந்தம் செய்துள்ளோம் அவர் தற்போது சிஎஸ்கே அணியின் திட்டங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் இந்தியா சிமெண்ட்ஸ் அணிக்காக தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய முதல் டிவிஷன் லீக்கிலும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆடுவார் என்று காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ravichandran Ashwin maybe joint CSK 2025


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->