#IPL2023 : பெங்களூர் அணிக்கு அடுத்தடுத்து பின்னடைவு..  முக்கிய வீரர்கள் விலகல்.! - Seithipunal
Seithipunal


16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74  போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த சீசனில் பெங்களூர் அணி முதல் போட்டியில் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி 2 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று பெங்களூர் அணி இரண்டாவது லீக் போட்டியில் கொல்கத்தா அணியுடன் விளையாடி வருகிறது.

இந்த நிலையில் பெங்களூர் அணியின் அதிரடி வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டோப்ளே காயம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து அதிரடி பேட்ஸ்மேன் ரஜத் படிதார் விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

RCB Reece topley possible to ruled out IPL 2023


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->