சாதனை! சர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்ச்கள் பிடித்த விராட் கோலி...
Record Virat Kohli takes most catches in international cricket
சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இத்தொடரில் இந்தியா,ஆஸ்திரேலியா,நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளன. இதில் இன்று நடைபெற்று வரும் முதல் அரையறுதி போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதுகின்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வந்தது. இதில் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 264 ரன்கள் அடித்து தனது ஆட்டத்தை முடித்தது ஆஸ்திரேலிய அணி. போட்டியில் ஜாஸ் இங்கிலீஷ் கேட்சை விராட் கோலி பிடித்துள்ளார்.

விராட் கோலி:
இதன் மூலமாகச் சர்வதேச கிரிக்கெட்டில் 335 கேச்சுகள் பிடித்து அதிகக் கேட்ச் பிடித்த இந்திய வீரராகச் சாதனைப்படுத்துள்ளார் விராட் கோலி. மேலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிகக் கேட்ச் பிடித்தவர்களின் பட்டியலில் ஜெயவர்த்தனே, ரிக்கி பாண்டிங் மற்றும் ராஸ் டெய்லர் ஆகியோரை அடுத்து விராட் கோலி நான்காவது இடத்தில் உள்ளார். இதனை ரசிகர்கள் பலர் இணையதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
English Summary
Record Virat Kohli takes most catches in international cricket