டி20 உலக கோப்பையில் இருந்து இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
Reece topley ruled out of T20 world cup
டி20 உலகக்கோப்பையில் இருந்து இங்கிலாந்து அணியின் முக்கிய பந்துவீச்சாளராக கருதப்படும் ரீஸ் டாப்லே விலகியுள்ளார்.
ஐசிசி 8வது டி20 உலக கோப்பை கடந்த அக்டோபர் 16 தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையில் மொத்தம் 16 அணிகள் விளையாடுகின்றன.
இதில் ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் 8 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன.
இதில், மீதமுள்ள 4 இடங்களுக்கு முதல் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் நமீபியா, இலங்கை, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் மேற்கிந்தியத் தீவுகள், ஸ்காட்லாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகளும் இடம்பெற்றுள்ளன. இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தேர்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லே பயிற்சியின் போது இடது கணுக்காலில் காயம்டைந்தார்.
இதனால் அவர் டி20 உலக கோப்பையில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் டைமல் மில்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
English Summary
Reece topley ruled out of T20 world cup