இந்தியா-தென் ஆப்பிரிக்கா முதலாவது ஒரு நாள் போட்டி.. இந்திய அணியில் அறிமுகமாகும் சிஎஸ்கே வீரர்.!
Rituraj Gaikwad and Ravi Bishnoi debut against South Africa
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரிதுராஜ் கெய்க்வாட் அறிமுகமாகியுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில், முதலில் விளையாடிய 2 டி20 தொடரை 2-1 என்று கணக்கில் இந்திய அணி கைப்பற்றிய நிலையில், அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெறுகிறது.
இன்று லக்னோவில் முதலாவது ஒரு நாள் போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போட்டியானது மதியம் 1:30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மைதானத்தில் பெய்த மழையின் காரணமாக களத்தை ஆய்வு செய்த நடுவர்கள் போட்டி 2 மணி நேரம் தாமதமாக தொடங்கும் என அறிவித்திருந்தனர்.
அதன்படி 2 மணி நேரம் மழை குறிக்கிட்டதால் 50 ஓவர்கள் போட்டியில் 10 ஓவர்கள் குறைக்கப்பட்டு 40 ஓவர்கள் போட்டியாக விளையாடப்படவுள்ளது. இந்த நிலையில் தற்போது டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஷிகர் தவான் பௌலிங் தேர்வு செய்துள்ளார்.
டி20 தொடரில் விளையாடிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றுள்ளது. தற்போது ஒரு நாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிநிலையில் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான இளம் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் அறிமுகமாகியுள்ளனர்.
அணி விபரம்
இந்திய அணி 11 வீரர்கள்:
ஷிகர் தவான்(கே), ஷுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன்(வி.கீ), ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், அவேஷ் கான்
தென்னாப்பிரிக்கா 11 வீரர்கள்:
ஜான்மேன் மலான், குயின்டன் டி காக்(வ), டெம்பா பவுமா(கே), ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி, தப்ரைஸ் ஷம்சி.
English Summary
Rituraj Gaikwad and Ravi Bishnoi debut against South Africa