நாட்டுக்காக தங்கம் வென்று, மேடையில் நின்று தேசிய கீதம் பாடுவதே எனது கனவு - ருதுராஜ் கெய்க்வாட் நெகிழ்ச்சி.! - Seithipunal
Seithipunal


ஆசிய விளையாட்டுப் போட்டியில் நாட்டுக்காக தங்கம் வெல்வதே எனது கனவு என இந்திய அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23ஆம் தேதி முதல் அக்டோபர் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 40 வகையான விளையாட்டு போட்டிகள் இடம் பெறுகிறது. அதன்படி இந்த விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் போட்டியும் ஒன்று. இதில் இந்த முறை முறை ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு கிரிக்கெட் அணிகளை அனுப்ப இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.

இதில், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் அதே நேரத்தில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரும் நடைபெற உள்ளதால், இளம் வீரர்களைக் கொண்ட புதிய அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து ருதுராஜ் கெய்க்வாட் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

இந்த வாய்ப்புக்கு உண்மையிலேயே நன்றி. இந்தியாவுக்காக விளையாடுவதை பெருமையாக உணர்கிறேன். ஆசிய விளையாட்டுப் போட்டி போன்ற இவ்வளவு பெரிய தொடரில் கேப்டனாக பொறுப்பேற்றது தனிப்பட்ட முறையில் எனக்கும் அனைத்து வீரர்களுக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

இந்த தொடருக்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று மேடையில் நின்று தேசிய கீதம் பாடுவதே எனது கனவு என நெகிழ்ச்சியுடன் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rituraj Gaikwad speech about captain of Asian Games


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->