கில்லின் அதிரடி; வங்காள தேசத்தை வீழ்த்திய இந்தியா; சர்வதேச போட்டியில் புதிய மைல் கல்லை தொட்ட ரோஹித் சர்மா..!
Rohit Sharma reaches new milestone in international cricket
08 அணிகள் பங்கேற்கும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாக்கிஸ்தான் மற்றும் டுபாயில் நடைபெறுகிறது. இன்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆட்டத்தில் முதல் ஓவரை வீசிய முகமது சமி, சவுமியா சர்காரை ரன் ஏதும் எடுக்க விடாமல் ஆட்டமிழக்க வைத்தார். அடுத்து, 02-வது ஓவரை வீசிய ஹர்சித் ராணா, கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோவை அவுட்டாக்கினார். அடுத்ததாக டான்சித் ஹசன் 25 ரன்களில் அக்சரின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் கே.எல் ராகுலிடம் பிடி குடுத்து அவுட்டானார்.

தொடர்ந்து, மெஹதி ஹசன் மிராஸ்,முஷ்பிகூர் ரகீமும் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தவுஹித் ஹிரிடோய் மற்றும் ஜேக்கர் அலி இருவரும் ஜோடி சேர்ந்து, தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி 06-வது விக்கெட்டுக்கு 154 ரன்கள் சேர்த்து அசத்தியது. நிதானமாக விளையாடி அரைசதம் அடித்த ஜேக்கர் அலி, 68 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மறுபுறம் தனது சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹிரிடாய், 114 பந்துகளில் 06 பவுண்டரி, 02 சிக்சருடன் சதமடித்தார். இறுதியில் வங்காளதேச அணி, 49.4 ஓவர்களில் 228 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இந்திய அணி தரப்பில் முகமது சமி அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர்.

இதில் ரோகித் சர்மா 41 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த விக்கெட்டுக்கு விராட் கோலி களமிறங்கி 22 ரன்களில் கேட்ச் கொடுத்து அவரும் ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஸ்ரேயாஸ் அய்யர் 15 ரன்களிலும், அக்சர் பட்டேல் 08 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர்.
மறுபுறம் நிலைத்து நின்று ஆடி சதம் விளாசிய சுப்மன் கில் 101 ரன்களும், கே.என்.ராகுல் 41 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் இந்திய அணி 46.3 ஓவர்கள் முடிவில் 04 விக்கெட்களை மாத்திரம் இழந்து, 231 ரன்கள் எடுத்த,06 விக்கெட் வித்தியாத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

அத்துடன், இன்றைய போட்டியில் ரோகித் சர்மா 12 ரன்கள் எடுத்தபோது, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 11,000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். இதன் மூலம் அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை ரோகித் சர்மா தற்போது முந்தியுள்ளார்.
276-வது போட்டியில் விளையாடும் போது சச்சின் டெண்டுல்கர் 11 ஆயிரம் ரன்களை கடந்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். இவர் 222 இன்னிங்ஸில் விளையாடி 11 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். தொடர்ந்து பேட்டிங் செய்த ரோகித் சர்மா, 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து, அரை சத்தத்தை தவறவிட்டமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Rohit Sharma reaches new milestone in international cricket