அஸ்வினுக்கு இன்னும் வாய்ப்பிருக்கு! கேப்டன் ரோஹித் ஷர்மாவின் சூசகம்.! - Seithipunal
Seithipunal


நடப்பாண்டில் ஆண்டவருக்கான 13வது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை உட்பட 10 அணிகள் பங்கேற்கின்றன.

வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்க உள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. சென்னையில் நடைபெறும் தனது முதல் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில் உலகக் கோப்பைத் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதன்படி ரோகித் சர்மா தலைமையில், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, பும்ரா, ஷர்துல் தாகூர், முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விளையாடும் இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் இடம் பெறாதது கடும் விமர்சனத்திற்கு ஆளானது. குறிப்பாக வலது கை சுழல் பந்துவீச்சாளரும் ஆல் ரவுண்டருமான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியில் இடம் பெறாதது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர்.

இந்த நிலையில் இந்திய அணியில் இடம்பெற அஸ்வினுக்கு இன்னும் வாய்ப்பு இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் "அஸ்வினுடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். ஆசிய விளையாட்டு போட்டிகள் அணியில் இடம்பெற்றுள்ள வாஷிங்டன் சுந்தரும் தயாராக இருக்கிறார்.

வீரர்களின் செயல்பாடுகள் குறித்து நான் நன்கு அறிந்து வைத்துள்ளேன்" என தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை அணியில் இடம் பெற்றிருந்த அக்ஷர் பட்டேல் காயம் காரணமாக உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெறுவது சந்தேகம் என்பதால் சுழல் பந்து மற்றும் ஆல்ரவுண்டர் இடத்திற்கு போட்டி நிலவு வரும் வேளையில் ரோஹித் ஷர்மாவின் இத்தகைய பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RohitSharma said Ashwin will chance included in World Cup Indian squad


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->