ஐபிஎல் 15 சீசன்.. ராஜஸ்தான் அணியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த குஜராத் அணி.!!
RR vs GT Match GT Win
ஐபிஎல் நடப்பு சீசனில் 24-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ வேட் 12 ரன்களில் வெளியேறினார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் பறிபோக கேப்டன் ஹர்த்திக் பாண்டியா தனது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணிக்கு ரன்களை சேர்க்க தொடங்கினார்.
ஹர்த்திக் பாண்ட்யா மற்றும் அபினவ் மனோகர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை உயர்த்தினர். 28 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அபினவ் மனோக ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடி ஹார்திக் பாண்டியா 52 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்து.
இதையடுத்து, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 24 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். கேப்டன் சஞ்சு சாம்சன் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு களமிறங்கி ஹெட்மயர் பொறுமையாக விளையாடி 29 ரன்களை எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் குஜராத் அணி 37 வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. மேலும் புள்ளிப் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 3-வது இடத்திற்கு தள்ளி குஜராத் டைட்டன்ஸ் அணி முதலிடத்தை பிடித்துள்ளது.