லாரஸ் விருதுக்கு நீரஜ் சோப்ரா பெயர்., சச்சின் பாராட்டு.! - Seithipunal
Seithipunal


லாரஸ் விருதுக்கு நீரஜ் சோப்ரா பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதையடுத்து சச்சின் டெண்டுல்கர் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரஸ் விருது மொனாகோ நாட்டைச் சேர்ந்த தனியார் அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் உலக சாதனை புரிந்து நீரஜ் சோப்ரா,

தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்று தந்தார். இதனையடுத்து உலகில் திருப்பு முனை ஏற்படுத்திய வீரர் என்ற அடிப்படையில் லாரஸ் விருதுக்கு அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர்,  இந்தியாவுக்காக உலக அளவில் உங்களின் வெற்றிகள் தொடர வாழ்த்துகள்,

லாரஸ் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதென்பது மிகப்பெரிய சாதனை. இதைப் போல் இன்னும் பல பெருமைகள் உங்களை வந்து சேரட்டும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sachin congratulated Neeraj Chopra


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->