டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறிய தென் ஆப்பிரிக்கா!
SAvPAK World Test Championship Final
பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் செஞ்சுரியனில் நடந்து வருகிறது, இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 57.3 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 301 ரன்கள் எடுத்தது, இதனால் பாகிஸ்தான் 90 ரன்கள் பின்தங்கியது.
பின்னர், 2வது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 148 ரன்கள் வெற்றி இலக்குடன் விளையாட துவங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு விக்கெட்டுகள் தொடர்ந்து விழ ரசிகர்கள் கதிகலங்கி போகினர்.
ஒரு நேரத்தில் 99 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் இழந்து திணறிய தென் ஆப்பிரிக்கா அணியில் ரபாடா-யான்சன் ஜோடி அதிரடியாக விளையாடி, 150 ரன்கள் சேர்த்து அபாரமாக வெற்றியை உறுதிப்படுத்தினர்.
இந்த வெற்றியின் மூலம், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தென் ஆப்பிரிக்கா தகுதி பெற்றுள்ளது. இது தென் ஆப்பிரிக்கா அணிக்கான முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
SAvPAK World Test Championship Final