அதிர்ச்சி!...பிரபல கிரிக்கெட் வீரர் ஒய்வு அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி, 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.  

சென்னையில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில்  2-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான கடந்த 6-ம் தேதி நடைபெற்ற டி20 தொடரில்,  11.5 ஓவர்களில்  3 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து வங்காளதேசத்தை எளிதில் வீழ்த்தி, இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், வங்காளதேச அணி வீரர் மஹ்மதுல்லா சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வங்காளதேச அணி வீரர் மஹ்மதுல்லா டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது, 3-வது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று  வரும் நிலையில், ஐதராபாத்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியுடன் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்தார்.

வங்காளதேச கிரிக்கெட் அணிக்காக இதுவரை 140 போட்டிகளில் விளையாடியுள்ள மஹ்மதுல்லா, பேட்டிங்கில் 2,394 ரன்களையும், பந்துவீச்சில் 40 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shock famous cricketer retirement announcement


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->