ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது!...அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்! - Seithipunal
Seithipunal


டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் காலமானார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, இவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும், இவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலமானார்.  

இவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மும்பை நரிமன் பாயிண்ட் பகுதியில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையத்திற்கு இன்று காலை கொண்டு வரப்பட்ட அவரது உடல் மீது தேசிய கோடி போர்த்தப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக டாடா அறக்கட்டளை வெளியிட்டு அறிக்கையில், ரத்தன் டாடாவின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணியளவில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று கூடியது. அப்போது,  மறைந்த தொழில் அதிபர் ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் இந்த  கூட்டத்தில் இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மேலும், மத்திய அரசு ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற தீர்மானம் இந்த கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bharat ratna award to ratan tata decision passed in cabinet


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->