2025-ம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. மேலும்  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது, காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அவ்வபோது உரிய அறிவிப்புகளை  வெளியிட்டு தேர்வு நடத்தி, அதன் மூலம்  பணியாளர்களை நியமனம் செய்து வருகிறது.

இதற்கிடையே  இந்த தேர்வாணையத்தில் போதிய தலைவர்கள் இல்லாததால், போட்டிக்கு தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கடும் அவதியடைந்தனர். தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி தலைவராக கடந்த ஆகஸ்ட் மாதம் எஸ்.கே.பிரபாகர் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், 2025-ம் ஆண்டு நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான அட்டவணையை தற்போது டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றும், தேர்வு அடுத்த ஆண்டு ஜூன் 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு குறித்த அறிவிப்பு ஜூலை 15-ம் தேதி வெளியாகும் என்றும், தேர்வு அடுத்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ள டிஎன்பிஎஸ்சி, தேர்வு ஜூலை 13-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tnpsc exam time table 2025 released


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->