#T20WorldCup : இறுதிப் போட்டிக்கு முன்னேறப்போவது யார்.? அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து பேட்டிங் தேர்வு.! - Seithipunal
Seithipunal


டி20 உலக கோப்பை பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகளும் இன்றுடன் முடிவடைந்து. அதனைத் தொடர்ந்து அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடைபெற உள்ளது.

இதில், குரூப்-1 பிரிவு புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2 பிரிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில் இன்று மதியம் 1.30 மணிக்கு  சிட்னி மைதானத்தில்  நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

அணி விவரம்

பாகிஸ்தான் அணி 11 வீரர்கள் :

முகமது ரிஸ்வான்(w), பாபர் ஆசம்(c), முகமது நவாஸ், முகமது ஹாரிஸ், ஷான் மசூத், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், ஷஹீன் அப்ரிடி

நியூசிலாந்து அணி 11 வீரர்கள் :

ஃபின் ஆலன், டெவோன் கான்வே(w), கேன் வில்லியம்சன்(c), க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, இஷ் சோதி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்.

டி20 போட்டிகளில் இதுவரை நேருக்கு நேர்

டி20 போட்டிகளில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் இதுவரை 28 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 17 போட்டிகளில் பாகிஸ்தான் அணியும், 11 போட்டிகளில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளது.

டி20 உலகக்கோப்பையில் இதுவரை நேருக்கு நேர்

டி20 உலக கோப்பையில் இவ்விரு அணிகளும் 6 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 4 போட்டிகளில் பாகிஸ்தான் அணியும், 2 போட்டிகளில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளது.

உலகக்கோப்பை நாக்-அவுட் போட்டிகளில் இதுவரை

உலகக் கோப்பையில் (50ஓவர் மற்றும் 20 ஓவர்) பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் இதுவரை 3 அரையிறுதி போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 3 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 World Cup PAK vs NZ semifinal match newzealand batting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->