தோல்வியில் துவண்டுபோன தென்னாபிரிக்க வீரர்களை நெகிழ வைத்த இந்திய ரசிகர்களின் வீடியோ! - Seithipunal
Seithipunal


டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியதால் தென் ஆப்பிரிக்கா அணி வருத்தத்துடன் வெளியேறிய போது, இந்திய ரசிகர்கள் அவர்களிடம் நாங்கள் உங்களை நேசிக்கிறோம் என்று ஒருமித்தமாக கூறி, அவர்களை உற்சாகப்படுத்தியது இந்தியர்களின் நல்லிணக்கத்தை வெளிக்காட்டியுள்ளது.

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இரண்டு அணிகளும் அனைத்து போட்டிகளிலும் தோல்வியடையாமல் முன்னேறி வந்த நிலையில், இந்த இறுதிப்போட்டி மிகக் கடுமையாக அமையும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.  

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்து, 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் வெற்றி பெற்ற இந்திய அணி டி20 உலக சாம்பியன் ஆனது.

தென் ஆப்பிரிக்க வீரர்களும், அணியின் பணியாளர்களும் வெற்றிக்காக கடுமையாக போராடி தோல்வி அடைந்ததை எண்ணி மிகவும் வருத்தத்துடன் மைதானத்தைவிட்டு வெளியேறினர்.

அப்போது அங்கிருந்த இந்திய ரசிகர்கள், தென் ஆபிரிக்க வீரர்களை நோக்கி, நாங்கள் உங்களை நேசிக்கிறோம் என்று ஒருமித்தமாக கூறி கைத்தட்டி அவர்களை உற்சாகப்படுத்தினர். 

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இந்தியர்களின் இந்த நற்செயல் குறித்து பலரும் பெருமை அடைகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20World Cup IND vs SA Indian fans viral video


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->