காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை பவானி தேவி.! - Seithipunal
Seithipunal


லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பவானி தேவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

லண்டனில் காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில், சீனியர் வாள்வித்தை போட்டியில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த பவானி தேவி கலந்து கொண்டார்.

இந்த சீனியர் வாள்வித்தை போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பவானி தேவி ஆஸ்திரேலிய வீராங்கனை வஸ்லேவாவை எதிர்கொண்டார். இதில் பவானி தேவி, 15-10 என்ற புள்ளிக் கணக்கில் வஸ்லேவாவை வீழ்த்தி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக இங்கிலாந்தில் நடைபெற்று வந்த காமன்வெல்த் போட்டிகளில், 22 தங்கம் உள்பட மொத்தம் 61 பதக்கங்களுடன் இந்தியா 4ஆம் இடம் பிடித்து சாதனை படைத்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu player Bhavani Devi won gold in the Commonwealth Championship


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->