மைதானத்தில் மயங்கி விழுந்த கால்பந்து வீரர் பலி...நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


பிரேசிலில் கடந்த 22ம் தேதி நடைபெற்ற கோபா லிபர்டடோர்ஸ் கால்பந்து ஆட்டத்தில், சாவ் பாலோ - உருகுவேயின் கிளப் நேஷனல் டி கால்பந்து அணிகள் மோதின. 


இந்த ஆட்டத்தில் சாவ் பாலோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவேயின் கிளப் நேஷனல் டி கால்பந்து அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. முன்னதாக இந்த ஆட்டத்தின் 84வது நிமிடத்தில் கிளப் நேஷனல் டி கால்பந்து அணியின் டிபெண்டர் ஜுவான் ஸ்கியர்டோ மைதானத்தில் சுருண்டு விழுந்து மயக்கம் அடைந்தார்.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஒழுங்கற்ற இதயத்துடிப்பு ஏற்பட்டதால் அவர் மயங்கி விழுந்ததாகவும், அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் கிளப் நேஷனல் டி கால்பந்து தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில், எங்கள் இதயங்களில் ஆழ்ந்த வலி மற்றும் தாக்கத்துடன், தேசிய கால்பந்து கிளப், அன்பான வீரர் ஜுவான் ஸ்கியர்டோவின் மரணத்தை அறிவிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The football player who fainted on the field died what happened


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->