மீண்டும் மீண்டும் சொதப்பும் இந்திய அணி.. முதல் இன்னிங்சில் ஆல் அவுட்..ரசிகர்கள் ஏமாற்றம்!  - Seithipunal
Seithipunal


சிட்னியில் நடந்த 5-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி முதல் இன்னிங்சில் 185 ரன்களில் ஆல் அவுட் ஆனது.மீண்டும் மீண்டும் இந்திய அணி சொதப்பியதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். 


 ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வென்றது .இதையடுத்து நடந்த  இரண்டாவது போட்டியில் பகல்-இரவு டெஸ்டில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. 3-வது டெஸ்ட் மழையால் 'டிரா' ஆன நிலையில் மெல்போர்னில் நடந்த 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா அபார  வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இந்தநிலையில் மோசமான பார்ம் காரணமாக ரோகித் விலகிய நிலையில் இன்று தொடங்கிய  5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் பும்ரா கேப்டனாக செயல்படுகிறார்.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா பேட்டிங்கை தேர்வு செய்தார். 
அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கியதும்  தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன கே.எல். ராகுல் 10 ரன்களிலும்., ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும் விரைவில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன்பின் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கில் - கோலி இணை 40 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில்  கில் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ரிஷப் பண்ட்  69 பந்துகளை எதிர்கொண்ட அவர் அதில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து பண்ட் உடன் இணைந்த ஜடேஜா  நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர்கள் அணி 100 ரன்களை கடக்க உதவினர்.ஆனால் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு தாக்குதலை சமாளித்து ரன் குவிப்பில் ஈடுபட முடியவில்லை.  ஸ்டார்க் பந்துவீச்சில் பண்ட் ஒருமுறை தலையிலும், ஒருமுறை கையிலும் பலத்த அடி வாங்கினார். இதனால் அவருக்கு ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்கப்பட்டது.

பொறுமையாக விளையாடிய பண்ட் 40 ரன்களிலும் அவரை தொடர்ந்து ஜடேஜா 26 ரன்களிலும் பும்ரா 22 ரன்கள் அடித்து அணி கவுரமான நிலையை எட்ட உதவினார். முடிவில் 72.2 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்தியா முதல் இன்னிங்சில் 185 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் ரோகித் மற்றும் ஆகாஷ் தீப்புக்கு பதிலாக சுப்மன் கில் மற்றும் பிரசித் கிருஷ்ணா இடம்பெற்றுள்ளனர்.ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்காட் போலன்ட் 4 விக்கெட்டுகளும், ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது.3 ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து முதல்நாள் ஆட்ட நேரமுடிவில் 9 ரன்களை எடுத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Indian team is back again All out in the first innings Fans are disappointed


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->