ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய பெண்கள் அணி! - Seithipunal
Seithipunal


41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! 

ஆசிய கோப்பை காண மகளிர் கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் இன்று தொடங்கியது. ஐக்கிய அமீரகம், மலேசியா,தாய்லாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, வங்கதேசம் ஆகிய ஏழு அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன. இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா இலங்கை அணிகள் மோதின.

டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜமிமா 53 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 33 ரன்கள் எடுத்தார்.

இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி 18.2 ஓவரின் முடிவில் 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டம் இழந்தது. இலங்கை அணியின் சார்பில் ஹர்ஷித சமரவிக்ரம 26 ரன்களும் ஹாசினி பெரேரா 30 ரன்களும் எடுத்தனர். 

இந்திய அணி தரப்பில் தயாளன் ஹேமலதா 3 விக்கெட்டும், பூஜா மற்றும் தீப்தி சர்மா தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். இதனால் இந்திய அணி 41 ரங்கன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Indian womens team won the first match of the Asia Cup


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->