சென்னையை பந்தாடிய பஞ்சாப்பின் பிரியன்ஷ் ஆர்யா; மீண்டும் சொதப்பிய சிஎஸ்கே..!
The Punjabi team defeated Chennai by 18 runs
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் 02-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடியது. முல்லான்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேகளமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியன்ஷ் ஆர்யா ஆட்டத்தின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அதிரடியாக தொடங்கினார். அதிரடியாக ஆடிய அவர் 42 பந்துகளில் 103 ரன்களை எடுத்து சத்தம் அடித்து ஆட்டமிழந்தார்.
இந்தியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 06 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் குவித்தது.

220 என்ற வெற்றி இலக்கை நோக்கி, களமிறங்கிய அணி, 20 வர்கள் நிறைவில், 05 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களை எடுத்து மீண்டும் நான்காவது முறையாக தோல்வியை தழுவியுள்ளது. அணி சார்பாக ரச்சின் ரவிந்திரா 36 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து டேவோன் கான்வே 69 ரன்களில் ஆட்டமிழந்தார். சிவம் தூபே 42 ரன்களிலும், தோனி 27 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார்.
பஞ்சாப் அணி சார்பாக, பெர்குசன் 02 விக்கெட்டுகளை, யஸ் தாகூர் மற்றும் மேக்ஸ்வெல் தல ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர். சென்னை அணி சார்பாக கலீல் அஹமட், அஷ்வின் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர். நூர் அஹமட் மற்றும் முகேஷ் சௌத்ரி தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இறுதியில் 20 ஓவர்கள் நிறைவில், சென்னை அணி 05 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களைஎடுத்தது. இதன் அடிப்படையில், நடப்பு போட்டிகளின் பட்டியலில் 09 இடத்தில உள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
The Punjabi team defeated Chennai by 18 runs