அறிமுக ஆட்டத்திலேயே டிராவிட், முரளி விஜய் சாதனையை சமன் செய்த திலக் வர்மா! - Seithipunal
Seithipunal


வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்து டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர் நேற்று தொடங்கியது. 

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இளம் இந்திய அணியில் திலக் வர்மா மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் சர்வதேச டி௨௦ ஆட்டத்தில் அறிமுகமாயினர். 

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. நிதானமான அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 149 ரன்கள் சேர்த்து. 

இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

அதிகபட்சமாக இந்திய அணியில் அறிமுகமான முதல் ஆட்டத்திலேயே திலக் வர்மா 2 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் உட்பட 39 ரன்கள் எடுத்தார். 

இதன் மூலம் திலக் வர்மா அறிமுக போட்டியில் தனித்துவமான ஒரு சாதனையை சமன் செய்துள்ளார். 

வெளிநாட்டில் அறிமுக போட்டியில் இந்திய அணி வீரர் ராகுல் டிராவிட் மற்றும் முரளி விஜய் ஆகியோருடன் 3 சிக்சர் அடித்த வீரர்களில் திலக் வர்மாவும் தற்போது இணைந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tilak verma record debut match IND vs WI T20


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->