பயிற்சியின் போது விராட் கோலிக்கு காலில் காயம்; இறுதி போட்டியில் பங்கேற்பாரா...? மாட்டாரா?
Virat Kohli injured his leg during training will he participate in the final match
09 வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு துபாயில் நடைபெறவுள்ளது. இதில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில், இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலிக்கு பயிற்சியின்போது கால் மூட்டு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் பேட்டிங் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, வேகப்பந்து வீச்சாளர் வீசிய பந்து ஒன்று தாக்கியதில் அவருக்கு கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக விராட் கோலி உடனடியாக அவர் பயிற்சியை நிறுத்தியதோடு, மருத்துவர் ஒருவர் உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து தேற்றியுள்ளார். அப்போது காயம் ஏற்பட்ட பகுதியில் மருந்து தடவி, பேண்டேஜ் போடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன்பின்னர், கோலி பேட்டிங் பயிற்சியில் ஈடுபடவில்லை. இதுபற்றி இந்திய அணியின் பயிற்சி ஊழியர் ஒருவர் கூறும்போது, அந்த காயம் அவ்வளவு தீவிரம் வாய்ந்ததல்ல. இறுதி போட்டியில் கோலி விளையாடுவார் என கூறியுள்ளார்.
நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டி துபாயில் நடந்தது. அந்த போட்டியில் விராட் கோலி சேசிங்கிற்காக, 84 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடி, அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இந்த சூழலில், இறுதி போட்டியில் அவருடைய ஆட்டம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Virat Kohli injured his leg during training will he participate in the final match