#IPL2023 : ஐபிஎல் கிரிக்கெட்டில் யாரும் தொட முடியாத புதிய சாதனை படைத்த விராட் கோலி.! - Seithipunal
Seithipunal


16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, மே 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணிக்கு டெல்லியில் நடைபெற்ற 50வது லீக் போட்டியில் டெல்லி பெங்களூர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. இதில் பெங்களூர் அணியின் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 55 ரன்களும், மகிபால் லோம்ரர் 54 ரன்களும் குவித்தனர்.

அதனைத் தொடர்ந்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 16.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 187 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் விராட் கோலி 55 ரன்கள் எடுத்தன் மூலம் ஐபில் வரலாற்றில் அதிக 7000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அந்த வகையில் 233 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 50 அரைசதங்களுடன் மொத்தம் 7,036 ரன்கள் அடித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள்

1. விராட் கோலி - 7043
2. ஷிகர் தவான் - 6536
3. டேவிட் வார்னர் - 6189
4. ரோகித் சர்மா - 6063
5. சுரேஷ் ரெய்னா - 5528


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virat Kohli reach 7000 runs in IPL


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->