ஆசியக் கோப்பையை வெல்ல போவது யார்.?  இந்தியா - இலங்கை அணிகள் மோதல்.. இலங்கை பேட்டிங் தேர்வு.! - Seithipunal
Seithipunal


இந்தியா - இலங்கை அணிகள் மோதும் ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் இறுதி போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைப்பெற்று வருகிறது. ஐக்கிய அமீரகம், மலேசியா, தாய்லாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, வங்கதேசம் ஆகிய 7 அணிகள் இத்தொடரில் பங்கேற்றன.

ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று போட்டிகளின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - தாய்லாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

அதனைத் தொடர்ந்து  நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இதனையடுத்து ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி  இன்று மதியம் 1 மணிக்கு நடைபெறுகிறது. இதில், இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்திய மகளிர் அணி 11 வீரர்கள் :

ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தயாளன் ஹேமலதா, ஹர்மன்ப்ரீத் கவுர்(கே), தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ்(வி.கீ), பூஜா வஸ்த்ரகர், சினே ராணா, ரேணுகா சிங், ராஜேஸ்வரி கயக்வாட்.

இலங்கை மகளிர் அணி 11 வீரர்கள் :

சாமரி அதபத்து(c), அனுஷ்கா சஞ்சீவனி(w), ஹர்ஷிதா மாதவி, ஹாசினி பெரேரா, நிலக்ஷி டி சில்வா, கவிஷா தில்ஹாரி, மல்ஷா ஷெஹானி, ஓஷாதி ரணசிங்க, சுகந்திகா குமாரி, இனோகா ரணவீர, அச்சினி குலசூரிய.

ஆசிய கோப்பையில் இந்திய மகளிர் அணி இதுவரை

இந்திய மகளிர் அணி தொடர்ந்து 8வது முறையாக ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த 2004 முதல் இதுவரை 7 மகளிர் ஆசியக் கோப்பை தொடர் நடைபெற்றுள்ளது. இதில் 7 முறையும் இந்திய மகளிர் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஒரு ஒரு முறை இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியிடம் தோற்று 2வது இடத்தை பிடித்துள்ளது.

ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் இதுவரை 4 முறை நேருக்கு நேர்  மோதியுள்ளன. இதில் 4  முறையும் இந்தியா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens Asia Cup final srilanka choose to bat


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->