ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி.. இலங்கையை வீழ்த்தி 7வது முறையாக இந்திய அணி சாம்பியன்.! - Seithipunal
Seithipunal


 ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் இறுதி போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி 7வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைப்பெற்று வருகிறது. ஐக்கிய அமீரகம், மலேசியா, தாய்லாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, வங்கதேசம் ஆகிய 7 அணிகள் இத்தொடரில் பங்கேற்றன.

ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று போட்டிகளின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் தாய்லாந்தை வீழ்த்தி இந்திய அணியும், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீழ்த்தி இலங்கை அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன

இதனையடுத்து இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி  இன்று மதியம் 1 மணிக்கு நடைபெற்றது. இதில், இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி இந்திய அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளையும் இழந்து 65 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.

இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய சினேகா ராணா 3 விக்கெட்டுகளும், தீப்தி ஷர்மா மற்றும் ராஜேஸ்வரி கயக்வாட் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 

அதனைத் தொடர்ந்து 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 8.3 ஓவர்களில் 71 ரன்கள் எடுத்ததுள்ளது. இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி இலங்கையை வீழ்த்தி 7வது முறையாக ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens Asia Cup india beat srilanka by 8 wickets


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->