#WPL2023 : மகளிர் ஐபிஎல் ஏலத்திற்கான தேதி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


மகளிர் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வீராங்கனைகளுக்கான ஏலத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 3ம் தேதி முதல் 26ம் தேதி வரை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மகளிர் ஐபிஎல் சீசனில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்கின்றன. மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், அகமதாபாத், லக்னோ அணி ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன.

அதன்படி, 5 அணிகளும் 4669 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டன. இதனையடுத்து மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வீராங்கனைகளுக்கான ஏலம் மும்பையில் ஜனவரி 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் சுமார் 1000 வீராங்கனைகள் பதிவு செய்துள்ளனர். மேலும், வீராங்கனைகளின் அடிப்படை விலையாக ரூ.50, 40 மற்றும் 20 லட்சத்தை பிசிசிஐ நிர்ணயித்துள்ளது. 

அதே போல் சர்வதேச போட்டிகளில் களமிறங்காத வீராங்கனைகளுக்கு ரூ.10 லட்சம், ரூ.20 லட்சம் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு அணிக்கும் ஏலம் எடுக்க அதிகபட்ச தொகையாக ரூ.12 கோடி நிர்ணயித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens premier league 2023 Auction February 13


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->