மகளிர் டி20 உலகக்கோப்பை.. இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா இந்திய அணி.. ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்.! - Seithipunal
Seithipunal


மகளிர் டி20 உலக கோப்பை முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன.

8வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் பிப்ரவரி 10ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த டி20 உலக்கோப்பையில் மொத்தம் 23 போட்டிகள் நடைபெற உள்ளது.

அவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது. அதேபோல் 'பி' பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில் தற்போது லீக் சுற்று போட்டிகளின் முடிவில் 'ஏ' பிரிவில் முதல் 2  இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா அணிகளும், அதேபோல் 'பி' பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த இங்கிலாந்து, இந்தியா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

அதனைத் தொடர்ந்து இன்று முதல் அரையிறுதி போட்டிகள் நடைபெற உள்ளது. அதன்படி இன்று நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.

டி20 உலக்கோப்பை போட்டிகளில் இதுவரை நேருக்கு நேர்

டி20 உலக கோப்பை போட்டிகளில் இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை 5 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 2 போட்டிகளில் இந்திய அணியும், 3 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens T20 World Cup INDW vs AUSW semifinal


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->