மகளிர் டி20 உலகக்கோப்பை.. வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு.. இந்திய அணியில் முக்கிய மாற்றம்.!
Womens T20 World Cup INDW vs WIW match West Indies batting
மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
8வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் பிப்ரவரி 10ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த டி20 உலக்கோப்பையில் மொத்தம் 23 போட்டிகள் நடைபெற உள்ளது.
அவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது. அதேபோல் 'பி' பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.
இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் இந்திய அணி தனது 2வது லீக் போட்டியில் இன்று வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதுகிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இதுவரை நேருக்கு நேர்
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதுவரை 20 t20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 12 போட்டிகளில் இந்திய அணியும் 8 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளது.
டி20 உலக கோப்பையில் இவ்விரு அணிகளும் இரண்டு போட்டிகளில் மோதியுள்ளன. இதில் ஒரு போட்டியில் இந்திய அணியும், ஒரு போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணியில் மாற்றம்
இந்திய அணியில் கடந்த போட்டியில் காயம் காரணமாக விளையாடதா ஸ்மிருதி மந்தானா விளையாடுகிறார்.
அணி விவரம்
இந்திய மகளிர் அணி 11 வீராங்கனைகள் :
ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர்(c), ரிச்சா கோஷ்(w), தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், தேவிகா வைத்யா, ராதா யாதவ், ராஜேஸ்வரி கயக்வாட், ரேணுகா தாக்கூர் சிங்
மேற்கிந்தியத் தீவுகள் 11 வீராங்கனைகள் :
ஹேலி மேத்யூஸ்(c), ஸ்டாஃபனி டெய்லர், ஷெமெய்ன் காம்ப்பெல், ஷபிகா கஜ்னபி, சினெல்லே ஹென்றி, செடியன் நேஷன், அஃபி பிளெட்சர், ஷாமிலியா கானல், ரஷாதா வில்லியம்ஸ்(w), கரிஷ்மா ராம்ஹராக், ஷகேரா செல்மன்
English Summary
Womens T20 World Cup INDW vs WIW match West Indies batting