பெண்கள் டி20 உலகக் கோப்பை!..இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி! - Seithipunal
Seithipunal


அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் 9-வது பெண்கள் உலகக் கோப்பை தொடர் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது.

இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி, தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது .10 அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் திருவிழா வரும் 20-ம் தேதி வரை  நடைபெற உள்ளது.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற  2வது போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 160 ரன்கள் குவித்தது.


இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ரேணுகா சிங் 2 விக்கெட் வீழ்த்தினார். அணியின் வீராங்கனைகள் நிலைத்து நின்று ஆடாமல் விரைவில் அவுட் ஆகினர்.இறுதியில், இந்திய அணி 102 ரன்களுக்கு ஆல் அவுட்டானதை அடுத்து, 58 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens t20 world cup new zealand beat india


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->