பெண்கள் டி20 உலகக்கோப்பை : அரையிறுதியில் நீடிக்குமா ஆஸ்திரேலியா?...இன்று பாகிஸ்தானுடன் மோதல்! - Seithipunal
Seithipunal


9-வது மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.10 அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் திருவிழா வரும் 20-ம் தேதி வரை  நடைபெற உள்ளது. மேலும் அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளும், பி பிரிவில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், வங்காளதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின .

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹீலே மேத்யூஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். பின்னர்  வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்தது.104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி,  12.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens t20 world cup will australia stay in the semi finals today clash with pakistan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->