மகளிர் உலகக் கோப்பை!...ஒரு விக்கெட் மட்டும் இழந்து ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!
Womens world cup australia win by just one wicket
9-வது மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.
10 அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் திருவிழா வரும் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக அலியா ரியாஸ் 26 ரன்கள் எடுத்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 82 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது.
ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பெத் மூனி மற்றும் கேப்டன் அலிசா ஹீலி களமிறங்கினர். இதில் பெத் மூனி 15 ரன்களில் கேட்ச் ஆன நிலையில், அலிசா ஹீலி 37 ரன்கள் எடுத்த நிலையில், காயம் காரணமாக வெளியேறினார். இறுதியில் 11 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 1 விக்கெட் மட்டுமே இழந்து 83 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
English Summary
Womens world cup australia win by just one wicket