சிங்கிள் வேண்டாம், செஞ்சுரி வேண்டும் - கோலியிடம் சொன்னது இவரா?! நடுவர் முதல் ராகுல் வரை....
World Cup 2023 KL Rahul Virat Kohli
உலக்கோப்பை கிரிக்கெட் தொடரில், வங்காளதேசத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் விராட் கோலி சதம் அடித்து, ஒரு நாள் ஆட்டங்களில் தனது 48-வது சதத்தையும் பதிவு செய்துள்ளார்.
விராட் கோழி 76 ரன்கள் எடுத்திருந்த போது அவர் சதம் அடிக்கவும், இந்திய அணி வெற்றி பெறவும் சரியாக 24 ரன்கள் தேவைப்பட்டிருந்தது. அப்போது, அப்போது கேஎல் ராகுல் ஒரு சிங்கிள் கூட எடுக்காமல் கோலி சதம் அடிப்பதற்காக வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார்.
கேஎல் ராகுலின் இந்த செயல் மைதானத்தில் இருந்த ரசிகர்களையும், நேரலையில் ஆட்டத்தை பார்த்து கொண்டிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.
இது குறித்து ஆட்டம் முடிந்து லோகேஷ் ராகுல் தெரிவிக்கையில், "விராட்கோலி சதமடிக்க வேண்டும் என்று, நான் சிங்கிள் எடுப்பதை தவிர்த்தேன்.
ஆனால், கோலி என்னிடம், நீங்கள் சிங்கிள் எடுக்காமல் போனால் நன்றாக இருக்காது. என்னுடைய தனிப்பட்ட சாதனைக்காக விளையாடுகிறேன் என்று நினைப்பார்கள். நீங்கள் சிங்கிள் எடுத்து கொடுங்கள் என்றார்.
அதற்க்கு நான், நம் வெற்றி உறுதியாகி விட்டது. எனவே, நீங்கள் சதமடியுங்கள், பெரிய ஷாட்டுகளை விளையாடுங்கள் என்று அவரிடம் கூறினேன் என்று விராட் கோலியிடம் கூறினேன்" என கே எல் ராகுல் தெரிவித்தார்.
இதற்கிடையே, நடுவர் ரிச்சர்ட் கேட்டல் போரக் வைடு கொடுக்காமல் போனதும் இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. 41-வது ஓவர் முடிவில் இந்தியாவின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டபோது, கோலி 97 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
42-வது ஓவரை வீசிய பங்களாதேஷ் வீரர் நசூம், முதல் பந்தை லெக் சைடில் வைடாக வீசினார். அடிக்க நகர்ந்த விராட் கோலி, பின்பு அந்த பந்தை தவிர்க்கவே, நடுவர் ரிச்சர்ட் கேட்டல் போரக் வைடு கொடுக்காமல் நடுநிலையோடு நடந்து கொண்டுள்ளார் என்கின்றனர் கிரிக்கெட் வல்லுநர்கள்.
எது எப்படி ஆனாலும் பங்களாதேஷ் அணியுடனான ஆட்டம், விராட் கோலியின் செஞ்சுரியுடன் சிறப்பானதாக அமைந்தது.
English Summary
World Cup 2023 KL Rahul Virat Kohli