மகளிர் ஐபிஎல்.. டெல்லிக்கு 151 ரன்கள் இலக்கு.. முதல் வெற்றியை பதிவு செய்யுமா பெங்களூரு அணி?
WPL banglore target of 151 runs against Delhi Capitals
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 151 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூர் அணி.
முதலாவது மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்த நிலையில் இன்று இரவு நடைபெற்று வரும் 10வது லீக் போட்டியில் பெங்களூர் - டெல்லி அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்துள்ளது. பெங்களூர் அணியில் சிறப்பாக விளையாடிய எலீஸ் பெர்ரி 62 ரன்கள் அடித்தார்.
பெங்களூர் அணி இதுவரை விளையாடிய 4 லீக் போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளதால் இந்த சீசனில் இருந்து வெளியேறும் நிலையில் உள்ளது. மேலும் மீதமுள்ள 4 போட்டிகளிலும் பெங்களூர் அணி வெற்றி பெற்றால் மட்டுமே நாக் அவுட் போட்டிகளுக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் காரணமாக பெங்களூர் அணி இந்த போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்து பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
English Summary
WPL banglore target of 151 runs against Delhi Capitals