மகளிர் ஐபிஎல்.. முதல் வெற்றியை பதிவு செய்யுமா பெங்களூரு அணி? பௌலிங் தேர்வு.!
WPL RCBW vs UPWW banglore won the toss choose Bowl
முதலாவது மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்த நிலையில் இன்று இரவு நடைபெறும் 13வது லீக் போட்டியில் பெங்களூர் - யுபி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
பெங்களூர் அணி இதுவரை விளையாடிய 5 லீக் போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளதால் இந்த சீசனில் இருந்து வெளியேறும் நிலையில் உள்ளது. மேலும் மீதமுள்ள 3 போட்டிகளிலும் பெங்களூர் அணி வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளேஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், யுபி வாரியர்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.

அதன் காரணமாக இன்றைய தினம் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி ப்ளேஆப் சுற்றுக்கு தகுதி பெற அதிக வாய்ப்புள்ளது. அதேபோல், பெங்களூர் அணி தோல்வியடைந்தால் ப்ளேஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
அணி விவரம்
UP வாரியர்ஸ் அணி:
அலிஸ்ஸா ஹீலி(w/c), தேவிகா வைத்யா, கிரண் நவ்கிரே, கிரேஸ் ஹாரிஸ், தஹ்லியா மெக்ராத், சிம்ரன் ஷேக், சோஃபி எக்லெஸ்டோன், தீப்தி சர்மா, ஸ்வேதா செஹ்ராவத், அஞ்சலி சர்வானி, ராஜேஸ்வரி கயக்வாட்
பெங்களூர் அணி:
ஸ்மிருதி மந்தனா (கே), சோஃபி டெவின், எலிஸ் பெர்ரி, ஹீதர் நைட், ரிச்சா கோஷ் (வி.கீ), ஷ்ரேயங்கா பாட்டீல், திஷா கசட், மேகன் ஷட், ஆஷா ஷோபனா, ரேணுகா தாக்கூர் சிங், கனிகா அஹுஜா
English Summary
WPL RCBW vs UPWW banglore won the toss choose Bowl