புலவாயோ டெஸ்ட் போட்டி; முதல் இன்னிங்சில் 243 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன ஜிம்பாப்வே..! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் செய்து 02 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான 02வது டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் கிரேக் எர்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.புலவாயோவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 44.3 ஓவரில் 157 ரன்களில் சகல விக்கட்டுக்களை இழந்தது. ரஷித் கான் அதிகபட்சமாக 25 ரன் எடுத்தார். அடுத்து ஆடிய ஜிம்பாப்வே 243 ரன்களுக்கு சகல விக்கட்டுகளை இழந்தது.

ஜிம்பாப்வே சார்பில் சிக்கந்தர் ராசா, நியூமென் நியாமுரி தலா 03 விக்கெட்டும், முசாராபனி 02 விக்கெட்டும்வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 06 ரன் எடுத்திருந்தது.

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. கேப்டன் கிரெய்க் எர்வின் மற்றும் சிக்கந்தர் ராசா ஆகியோர் அரை சதம் கடந்தனர்.

எர்வின் 75 ரன்னும், சிக்கந்தர் ராசா 61 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். சீன் வில்லியம்ஸ் 49 ரன்னில் ஆட்டமிழந்து அரை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். மற்ற வீரர்கள் சோபிக்கவில்லை.

ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 04 விக்கெட்டும், அஹ்மத்ஜாய் 03 விக்கெட்டும், பரீத் அஹ்மத் 02 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 86 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சை ஆடிய ஆப்கானிஸ்தான் இரண்டாம் நாள் முடிவில் 03 விக்கெட்டுக்கு 46 ரன்கள் எடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Zimbabwe, who were all out for 243 in the first innings of the Bulawayo Test


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->