திருவாரூரில் 1-5ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு - காரணம் என்ன?
1 to 5 th class tamil exam postpond in thiruvarur district
தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆண்டு இறுதி தேர்வு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று முடிந்ததையடுத்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு வருகிற 7-ந்தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், திருவாரூர் மாவாட்டத்தில் ஏப்ரல் 7 தேதி அன்று நடக்கவிருந்த 1-5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதாவது ஆழி தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு வருகிறட் ஏப்ரல் 7இல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழ் பாடத் தேர்வு ஏப்ரல் 8இல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வழக்கம் போல நடைபெறும் என்றும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
English Summary
1 to 5 th class tamil exam postpond in thiruvarur district