மீன் சுருட்டியில் 10 சவரன் கொள்ளை..இருவர் கைது.!!
10 Savaran Robbery jewelry Meensurutti Arrest two persons
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த மீன்சுருட்டியில் புதியதாக நகைக்கடை திறக்கப்பட்டு செயல்பட்டு வந்துள்ளது.
மதிய உணவு இடைவேளை சமயத்தில் நகை கடைக்கு இருவர் வந்ததுள்ளனர். நகைக்கடையில் பணிபுரியும் ஊழியர் மட்டுமே கடையில் இருப்பதை நன்கு அறிந்த கொள்ளையர்கள் பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து நகை வாங்குவதுபோல் நடித்து 10 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து, கடையின் உரிமையாளர் மீன்சுருட்டி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் கடையின் பாதுகாப்பு கேமராக்களை ஆய்வுசெய்த போலீசார் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன், ராமகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
10 Savaran Robbery jewelry Meensurutti Arrest two persons