நெருங்கும் த.வெ.க மாநாடு - 100 அடி உயரத்தில் நிரந்தர கொடிக்கம்பம் அமைக்கும் பணி தீவிரம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27-ந்தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டு பணிகள் கடந்த 4-ந்தேதி பந்தல்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 

இதைத் தொடர்ந்து, இந்த மாநாட்டிற்கு வருகிற தொண்டர்களுக்கு உணவு, குடிநீர் தடையின்றி வழங்கும் பணிகள் மற்றும் கழிப்பறை அமைக்கும் பணிகள் தனியார் நிறுவனத்திடமும், மாநாடு மேடை அமைக்கும் பணி சினிமா கலை இயக்குனர்களிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டின் நினைவாக, மாநாடு நடைபெறும் இடத்தில் 100 அடி உயரத்தில் நிரந்தர கொடிக்கம்பம் அமைக்கப்படுகிறது. 27-ம் தேதி மாநாடு தொடங்கும் முன்பு இந்தக் கொடிக்கம்பத்தில் விஜய் கொடியேற்றுகிறார்.

இந்த நிலையில் 100 அடி உயர நிரந்தர கொடிக்கம்பம் அமைக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் கொடிக்கம்ப பூஜை நடைபெற உள்ளது. புயல், மழையைத் தாங்கும் வகையில் கொடிக்கம்பம் வடிவமைப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

100 feets permenant flag tree for tvk conference


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->