மூன்று நாள் விடுமுறை - தமிழகத்தில் 1152 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வார விடுமுறை மற்றும் முக்கிய தினங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம். அந்த வகையில், நவம்பர் 15 பவுர்ணமி, நவம்பர் 16, 17 வார இறுதி நாட்கள் என்று தொடர் விடுமுறை வருகிறது. இதனை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதாவது, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம்,ஈரோடு, திருப்பூருக்கு நவம்பர் 15, 16-ம் தேதிகளில் 705 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர்,பெங்களூருவுக்கு 81 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன

பவுர்ணமி தினத்தை முன்னிட்டு நாளைய தினம் திருவண்ணாமலைக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 350 பேருந்துகளும் கோயம்பேட்டில் இருந்து 11 பேருந்துகளும் மாதவரத்தில் இருந்து 5 பேருந்துகள் என்று மொத்தம் 1,152 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

பயணிகள் மேம்படுத்தப்பட்ட www.tnstc.in என்ற இணையதளத்தில் அல்லது TNSTC கைபேசி செயலியினை பதிவிறக்கம் செய்து பயணச்சீட்டை முன்பதிவு செய்து பயணிக்க முடியும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1152 special bus run in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->