#BREAKING || ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.1.17 லட்சம் அபராதம்.!! போக்குவரத்துத்துறை அதிரடி.!! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழம் முழுவதும் உள்ள பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகளை பிரதானமாக பயன் படுத்துகின்றனர். நெடுந்தூரம் செல்வோர் தனியார் ஆம்னி பேருந்து சேவையை அதிக அளவில் பயன்படுத்தும்போது கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாக புகார் எழுகிறது.

அதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் வேலூர் சரகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்த நிலையில் ஆய்வில் இறங்கிய போக்குவரத்து துறை அதிகாரிகள் வேலூர் போக்குவரத்து சரகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஜனவரி 10 ம் தேதி முதல் ஜனவரி 12ம் தேதி வரை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 31 ஆம்னி பேருந்துகள் விதிகளை மீறியும், அனுமதி இன்றியும் இயக்கப்பட்டது தெரிய வந்தது. அதனால் விதிகளை மீறிய 31 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.1.17 லட்சம்அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

117000 fine for omni buses in vellore zone


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->