#கடலூர் || சிதம்பரத்தில் 11-ம் வகுப்பு மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!!
11th student committed suicide by jumping in front of a train in Cuddalore
குறைந்த மதிப்பெண் எடுத்ததால் பள்ளி மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!!
கடலூர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த அண்ணாமலை நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜானகி அவர்களின் மகன் ஜீவா தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் 11 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில் நேற்று தேர்வு முடிவு வெளியானது. இந்த நிலையில் மாணவன் ஜீவா குறைந்த மதிப்பெண் எடுத்துள்ளார்.
பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மன உளைச்சலில் இருந்த ஜீவா நேற்று இரவு விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற பயணிகள் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சிதம்பரம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவன் ஜீவாவின் உடலை கை பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ஜீவா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிவைத்த கடிதத்தையும் போலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அந்த கடிதத்தில் "என்னுடைய அம்மா, பாட்டி என்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்தார்கள். பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது குறைந்த மதிப்பெண் எடுத்தேன். பதினோராம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுக்கலாம் என நினைத்தேன். இருப்பினும் இந்த முறையும் நான் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளேன். இதனால் நான் கல்வி பயில தகுதி இல்லாதவன். எனவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன். என் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. பாட்டி நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள், தம்பி நன்றாக படிக்க வையுங்கள், அம்மா உடம்பை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்" என உருக்கமாக எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
11th student committed suicide by jumping in front of a train in Cuddalore