தீபாவளி பண்டிகை - இன்று முதல் சென்னைக்கு 12000 பேருந்துகள் இயக்கம்.!
12000 buses run to chennai
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் வெளி மாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். அதிலும் குறிப்பாக சென்னையில் இருந்து பேருந்துகள், ரயில்கள் மூலம் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சொந்த ஊருக்குச் சென்றனர்.
இந்த நிலையில், சொந்த ஊர் சென்ற மக்கள் மீண்டும் சென்னை திரும்ப வசதியாக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இது குறித்து தமிழக அரசின் விரைவு போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர் தெரிவித்து இருப்பதாவது:-
"தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக 2-ந்தேதி அதாவது இன்று முதல் 4-ந்தேதி வரையில் நாள்தோறும் இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன் 3 ஆயிரத்து 165 சிறப்பு பேருந்துகளும், பிற முக்கிய ஊர்களிலிருந்து 3 ஆயிரத்து 405 பேருந்துகள் என்று மொத்தம் 12 ஆயிரத்து 846 பேருந்துகள் இயக்கப்படும்.
ஆகவே, பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலில் பயணிப்பதை தவிர்த்து, தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு காலியாக உள்ள இருக்கைகளில் முன்பதிவு செய்து பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
12000 buses run to chennai