அடுத்தடுத்து போட்டுத் தாக்கும் இஸ்ரேல்!...ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் படுகொலை! - Seithipunal
Seithipunal


கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலின் எல்லையை ஒட்டிய பகுதியில், ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கொண்டு கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த போர் தொடங்கி ஓராண்டினை நிறைவு செய்துள்ளது.

இதற்கிடையே, இஸ்ரேல் ராணுவம், காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போரிட்டு வரும் நிலையில், லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் நாள்தோறும் இஸ்ரேலை  தாக்கி வந்தனர்.  இந்த சூழ்நிலையில்  பல்வேறு வழிகளை கையாண்ட இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும் இஸ்ரேல் பதில் தாக்குல் நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவராக செயல்பட்டு வந்த இஜ் அல்-தின் கசாப்பை படுகொலை செய்து விட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.

இதற்கிடையே, பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர் ஹசன் நஸ்ரல்லா  இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். தொடர்ந்து நஸ்ரல்லாவின் உறவினர் ஹஷேம் சபிதீன் ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில் அவரும் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Israel will attack one after the other the head of the political wing of the hamas organization was assassinated


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->