கடலில் குளிக்க சென்ற 12ம் வகுப்பு மாணவருக்கு நேர்ந்த அவலம்..! - Seithipunal
Seithipunal


கடலில் குளித்த மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் அஷ்ரப் . இவர் 12ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டியில் பங்கேற்று விட்டு  அவர் நண்பன் டேனியல் என்பவருடன் மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது அஷ்ரப் தனக்கு நீச்சல் தெரியும் நான் சிறிது தூரம் செல்கிறேன் எனக்கூறி கடலுக்குள் சென்றார். 

அப்போது எதிர்பாராத விதமாக ராட்சத கடல் அலை அவரை இழுத்துச் சென்றது. டேனியலின் கூச்சல் சத்தம் கேட்டு வந்த மீனவர்கள் அவரை மீட்க முயற்சித்தனர். ஆனால், முடியவில்லை என கூறப்படுகிறது. அவரின் உடல் பிளாக் எதிரில் கடற்கரையில் கரை ஒதுங்கியது.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழ்ககுபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12th Student Drowns In to water


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->