இன்று 12ம் வகுப்பு துணைத்தேர்வு நடைபெறும் - அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


12ம் வகுப்பில் பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான துணைத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் இன்று (ஜூன் 19ஆம் தேதி) துணைத்தேர்வு எழுதி, தங்களுடைய மேற்படிப்பை தொடர தமிழ் தமிழக அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது.

அந்த வகையில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவில் 47,934 பேர் தேர்ச்சி பெறாமல் தோல்வியடைந்துள்ளனர். இதனையடுத்து துணைத் தேர்வுக்கான அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது.

அதன்படி இன்று தொடங்கும் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு ஜூலை நான்காம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும், இந்த துணை தேர்வின் முடிவுகள், ஜூலை மாதமே வெளியிடப்படுகிறது.

இந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக மாணவர்கள் இன்று துணை தேர்வில் நடக்குமா நடக்காதா என்று குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலையில் இன்று திட்டமிட்டபடி பன்னிரண்டாம் வகுப்பு துணைத் தேர்வு நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

மேலும், துணைத் தேர்வு குறித்த அப்டேட்களை தெரிந்து கொள்ள பெற்றோர் மற்றும் மாணவர்கள் www.dge.tn.gov.in/ என்ற அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தை பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12th supplementry exam today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->