13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 2 முதியவர்கள் போக்சோ சட்டத்தில் கைது.! - Seithipunal
Seithipunal


13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 2 முதியவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி சேவா சங்கம் தெருவை சேர்ந்தவர் கேசவன் (வயது 76). இவருக்கு திருமணமாகி 3 பெண்கள் உள்ளனர். இவர் அந்த பகுதியில் பிரின்டிங் பிரஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.  அதேபோல் சின்னாளப்பட்டி கவுண்டர் தெரு பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 56). இவருக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் அதே பகுதியில் வசிக்கும் ஏழாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமியின் அண்ணன் கார்த்திக் என்பவர் சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 இதனையடுத்து சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு கேசவன் மற்றும் பாபுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

13: years old girl girl sexual harrasment 2 old man arrested in Dindigul


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->