திருச்சியில் 14 வயது சிறுமி கர்ப்பம்.. சிறுவன் உட்பட இருவர் போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


திருச்சியில் 14 வயது சிறுமி கர்ப்பமான வழக்கில் சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறியில் தந்தையை இழந்த சிறுமி 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாக சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் ஆரோக்கியமேரி ஜெயாவிற்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் படி முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் காவிரியிடம் சமூகப் பாதுகாப்பு ஆர்வலர்கள் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து சிறுமியின் வீட்டிற்கு சென்ற மகளிர் போலீசார் மற்றும் சமூக நல பாதுகாப்பு அதிகாரிகள் சிறுமியின் தாய் மற்றும் சிறுமியிடம் விசாரணை செய்துள்ளனர். அப்போது சிறுமி 7 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. மேலும் இந்த விசாரணையில் முசிறி பகுதியைச் சேர்ந்த ரத்தினவேல் (21), தொட்டியம் தாலுகாவைச் சேர்ந்த (16) மற்றும் துலையாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பாபு (21) உள்ளிட்டோர் சிறுமியிடம் அத்துமீறி நடந்து கொண்டது தெரியவந்தது.

இதனையடுத்து வாலிபர் ரத்தினவேல் மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்டோர் இருவரை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய வாலிபர் பாபுவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கர்ப்பிணியாக இருக்கும் சிறுமி முசிறி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

14 year old girl pregnant in Trichy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->