#BREAKING || கஞ்சா கேஸ்.. சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்.!!
15 days judicial custody to Savukku Shankar in ganja case
கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரால் தேனியில் கைது செய்யப்பட்ட போது கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மற்றும் அவருடன் இருந்த இருவர் மீது தேனி மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த நிலையில் கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்படுவதாக அவரது வழக்கறிஞர் குற்றம் சாட்டி இருந்த நிலையில் இன்று மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் ஆஜர் படுத்தப்பட்டார்.
அப்போது அவரது வலது கையில் கட்டு போடப்பட்டிருந்தது. சவுக்கு சங்கர் தாக்கப்படவில்லை என காவல்துறை விளக்கம் அளித்திறந்த நிலையில் இன்று சவுக்கு சங்கரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின் போதும் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்படவில்லை என உறுதிப்படுத்த தெரிவித்து இருந்தார்.
ஆனால் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சவுக்கு சங்கரின் வலது கையில் கட்டு போடப்பட்டிருந்தது. இதற்கிடையே நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர் படுத்தப்பட்ட பிறகு வழக்கை விசாரித்த நீதிபதி சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் பிறப்பித்து உத்தரவிட்டு உள்ளார். இதன் மூலம் கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் வரும் மே 23ஆம் தேதி வரை கோவை மத்திய சிறையில் அடைக்கப்படுவார்.
English Summary
15 days judicial custody to Savukku Shankar in ganja case